Saturday, August 2, 2025

12 ராசிகள் 27 நட்சத்திரங்கள் எந்த நிறத்தில் பசு அமைந்தால் யோகம்

 கோ மாதா என அழைக்கப்படும் பசுவை பெண்கள் கடவுளின் அம்சமாக கருதி வண வருகிறார்கள். இதில் ஒருவர் பிறந்த நட்சத்திரத்துக்கு ஏற்ப எந்த நிறத்தில் பசு அமைந்தால் யோகம் கிடைக்கும் என்ற விவரம் இங்கே நட்சத்திரம் வாரியாக தரப்பட்டு உள்ளது. இந்த நிறப்பசுக்களை இந்த நட்சத்திரத்தைச் சேர்ந்தவர்கள் வாங்கி வளர்க்கலாம். அல்லது பிறருக்கு தானம் செய்யலாம்.

அசுவனி-வெள்ளைப்பசு
பரணி-கருப்பு அல்லது சிவப்பு கலந்து பசு
கிருத்திகை-கருப்பு அல்லது செவிலி பசு
ரோகிணி-கருமயிலை, செம்மலை பசு
மிருகசீர்ஷம்-வெள்ளை அல்லது செவிலி பசு
திருவாதிரை-சிவப்பு மற்றும் செம்மலைப்பசு
புனர்பூசம்-பில்லை மற்றும் வெள்ளைப்பசு
பூசம்-மயிலை மற்றும் வெள்ளைப்பசு
ஆயில்யம்-மயிலை மற்றும் வெள்ளைப்பசு
மகம்-செவிலி மற்றும் வெள்ளைப்பசு
பூரம்-கருப்பு அல்லது வெள்ளைப்பசு
உத்தரம்-வெள்ளை அல்லது 2, 3 நிறம் கலந்த பசு
அஸ்தம்-கருப்பு மற்றும் மயிலை பசு
சித்திரை-கருமயிலை, வெள்ளைப்பசு
சுவாதி-கருப்பு மற்றும் மயிலை பசு
விசாகம்-வெள்ளை மற்றும் மயிலைபசு
அனுஷம்-மயிலை மற்றும் இரண்டு கலந்த பசு
கேட்டை-கருப்பு மற்றும் 2, 3 நிறங்கள் கலந்த பசு
மூலம்-கருப்பு பசு
பூராடம்-கருமயிலைப் பசு
உத்திராடம்-செவ்விலி மற்றும் கருப்புப்பசு
திருவோணம்-பில்லை மற்றும் செவிலிப்பசு
அவிட்டம்-வெள்ளை மற்றும் செம்மலைப்பசு
சதயம்-சிவப்பு மற்றும் இரண்டு நிறம் கலந்த பசு
பூரட்டாதி-கருப்பு மற்றும் செம்மலை நிறப் பசு
உத்திரட்டாதி-சிவப்பு மற்றும் செவிலிப் பசு
ரேவதி-கருப்பு செவிலி மயிலைப் பசு வளர்க்க அல்லது தானம் செய்ய ஏற்றவை.

No comments:

Post a Comment