Saturday, August 2, 2025

நட்சத்திரங்களும் பஞ்சபூத தத்துவங்களும்

 அஸ்வினி,பரணி, கிருத்திகை, ரோகிணி, மிருகசீரிடம் - நிலம்

திருவாதிரை, புனர்பூசம், பூசம், ஆயில்யம், மகம், பூரம் - நீர்
உத்தரம், அஸ்தம்,சித்திரை, சுவாதி, விசாகம் - நெருப்பு
அனுசம், கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம்- காற்று
திருவோணம், அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி- ஆகாயம்.

12 ராசிகள் 27 நட்சத்திரங்கள் எந்த நிறத்தில் பசு அமைந்தால் யோகம்

 கோ மாதா என அழைக்கப்படும் பசுவை பெண்கள் கடவுளின் அம்சமாக கருதி வண வருகிறார்கள். இதில் ஒருவர் பிறந்த நட்சத்திரத்துக்கு ஏற்ப எந்த நிறத்தில் பசு அமைந்தால் யோகம் கிடைக்கும் என்ற விவரம் இங்கே நட்சத்திரம் வாரியாக தரப்பட்டு உள்ளது. இந்த நிறப்பசுக்களை இந்த நட்சத்திரத்தைச் சேர்ந்தவர்கள் வாங்கி வளர்க்கலாம். அல்லது பிறருக்கு தானம் செய்யலாம்.

அசுவனி-வெள்ளைப்பசு
பரணி-கருப்பு அல்லது சிவப்பு கலந்து பசு
கிருத்திகை-கருப்பு அல்லது செவிலி பசு
ரோகிணி-கருமயிலை, செம்மலை பசு
மிருகசீர்ஷம்-வெள்ளை அல்லது செவிலி பசு
திருவாதிரை-சிவப்பு மற்றும் செம்மலைப்பசு
புனர்பூசம்-பில்லை மற்றும் வெள்ளைப்பசு
பூசம்-மயிலை மற்றும் வெள்ளைப்பசு
ஆயில்யம்-மயிலை மற்றும் வெள்ளைப்பசு
மகம்-செவிலி மற்றும் வெள்ளைப்பசு
பூரம்-கருப்பு அல்லது வெள்ளைப்பசு
உத்தரம்-வெள்ளை அல்லது 2, 3 நிறம் கலந்த பசு
அஸ்தம்-கருப்பு மற்றும் மயிலை பசு
சித்திரை-கருமயிலை, வெள்ளைப்பசு
சுவாதி-கருப்பு மற்றும் மயிலை பசு
விசாகம்-வெள்ளை மற்றும் மயிலைபசு
அனுஷம்-மயிலை மற்றும் இரண்டு கலந்த பசு
கேட்டை-கருப்பு மற்றும் 2, 3 நிறங்கள் கலந்த பசு
மூலம்-கருப்பு பசு
பூராடம்-கருமயிலைப் பசு
உத்திராடம்-செவ்விலி மற்றும் கருப்புப்பசு
திருவோணம்-பில்லை மற்றும் செவிலிப்பசு
அவிட்டம்-வெள்ளை மற்றும் செம்மலைப்பசு
சதயம்-சிவப்பு மற்றும் இரண்டு நிறம் கலந்த பசு
பூரட்டாதி-கருப்பு மற்றும் செம்மலை நிறப் பசு
உத்திரட்டாதி-சிவப்பு மற்றும் செவிலிப் பசு
ரேவதி-கருப்பு செவிலி மயிலைப் பசு வளர்க்க அல்லது தானம் செய்ய ஏற்றவை.

நட்சத்திர பரிகார கோவில்கள்

 
நட்சத்திர பரிகார கோவில்கள்
27 நட்சத்திரங்கள் 12 ராசிகளில் அமர்ந்து அவரவர் கர்ம வினைக்கு ஏற்ப பலன்களை அளிக்கின்றன. நம்முடைய நட்சத்திரங்களுக்கு உரிய கோவில்களுக்கு சென்று வந்தால் நன்மைகள் வந்தடையும்.
12 ராசிகளையும் நவகிரகங்கள் ஆட்சி செய்கின்றன. 27 நட்சத்திரங்கள் 12 ராசிகளில் அமர்ந்து அவரவர் கர்ம வினைக்கு ஏற்ப பலன்களை அளிக்கின்றன. நம்முடைய நட்சத்திரங்களுக்கு உரிய கோவில்களுக்கு சென்று வந்தால் நன்மைகள் வந்தடையும்.
மேஷம் அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : திருநள்ளாறு சனீஸ்வரர் கோவில்
பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : திருவாலங்காடு மகா காளி கோவில்
கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : திருநாகை ஆதி சேஷன் கோவில்
ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : நாக நாத சுவாமி, திருநாகேச்வரம்
மிருகசீரிஷ நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : துர்க்கா தேவி, கதிராமங்கலம்
திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : சனீஸ்வரர் திருகொள்ளிக்காடு
புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : ஆலங்குடி குருபகவான்
பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : சனீஸ்வரர் குச்சனூர்
ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : சனீஸ்வரர், திருப்பரங்குன்றம்
மக நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : சிதம்பரம் தில்லைகாளி
பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : திருமணஞ்சேரி ராகு பகவான்
உத்திர நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : மூவனுர் வாஞ்சியம்மன்
ஹஸ்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : திருவாரூர் ராஜதுர்கை
சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : திருவாரூர் ராஜதுர்கை
சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : திருவானைக்காவல் சனீஸ்வரர்
விசாக நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : சோழவந்தான் சனீஸ்வரர்
அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : திருவிடை மருதூர் மூகாம்பிகை
கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : பல்லடம் அங்காள பரமேஷ்வரி
உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : தென்முக கடவுள் , துர்காதேவி -தர்மபுரம்
மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : திருநாவலூர் தென்முக கடவுள்
பூராட நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : திருநாவலூர் தென்முக கடவுள்
திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : ராஜகாளி அம்மன் , தேதுபட்டி
அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : சனி , நாகராஜா - கொடுமுடி,
கரூர் சதய நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : சனி , நாகராஜா - திருச்செங்கோடு
பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : ஆதி சேஷன் சித்திரகுப்தர் - காஞ்சிபுரம்
உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : சனி, தக்ஷினாமூர்த்தி - திருவையாறு

ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : சனீஸ்வரர் - ஓமாம்புலியூர் 

வெற்றிதரும் நட்சத்திர குறியீடுகள்

 கிருஷ்ணன் தன் ஜென்ம நட்சத்திர குறியீடான தேரை ஓட்டி பாண்டவர்களுக்கு வெற்றி தேடி தந்தான்.

நட்சத்திரவடிவம்:-

🔯அஸ்வினி - குதிரைத்தலை

🔯பரணி - யோனி,அடுப்பு,முக்கோணம்

🔯கிருத்திகை - கத்தி,கற்றை,வாள்,தீஜ்வாலை

🔯ரோஹிணி - தேர்,வண்டி,கோயில்,ஆலமரம்,ஊற்றால்,சகடம்

🔯மிருகசீரிடம் - மான்தலை,தேங்கைக்கண்

🔯திருவாதிரை - மனிததலை,வைரம்,கண்ணீர்துளி

🔯புனர்பூசம் - வில்

🔯பூசம் - புடலம்பூ,அம்புக்கூடு,பசுவின்மடி

🔯ஆயில்யம் - சர்ப்பம்,அம்மி

🔯மகம் - வீடு,பல்லக்கு,நுகம்

🔯பூரம் - கட்டில்கால்,கண்கள்,அத்திமரம்,சதுரம்,மெத்தை

🔯உத்திரம் - கட்டில்கால்,கம்பு,குச்சி,மெத்தை

🔯ஹஸ்தம் - கை

🔯சித்திரை - முத்து,புலிக்கண்

🔯ஸவாதி - பவளம்,தீபம்

🔯விசாகம் - முறம்,தோரணம்,குயவன்சக்கரம்

🔯அனுசம் - குடை,முடப்பனை,தாமரை,வில்வளசல்

🔯கேட்டை - குடை,குண்டலம்,ஈட்டி

🔯மூலம் - அங்குசம்,சிங்கத்தின்வால்,பொற்காளம்,யானையின்துதிக்கை

🔯பூராடம் - கட்டில்கால்

🔯உத்திராடம் - கட்டில்கால்

🔯திருவோணம் - முழக்கோல்,மூன்றுபாதச்சுவடு,அம்பு

🔯அவிட்டம் - மிருதங்கம்,உடுக்கை

🔯சதயம் - பூங்கொத்து,மூலிகைகொத்து

🔯பூரட்டாதி - கட்டில்கால்

🔯உத்திரட்டாதி - கட்டில்கால்

🔯ரேவதி - மீன்,படகு.

உங்கள் #பிறந்த_நட்சத்திரத்திற்கான தேவார பாடல்கள்

 உங்கள் #பிறந்த_நட்சத்திரத்திற்கான தேவார பாடல்கள்

""""""""""""""""""""""""""

நீங்கள் உங்களது பிறந்த நட்சத்திரத்தின் பாடலை ஒவ்வொரு நாளும் மூன்று தடவை பாடி,

சிவபெருமானை வணங்கி வந்தால், நவக்கிரகங்களால் ஏற்படும் இன்னல்கள் நீங்கி நிம்மதியாக வாழலாம்.

#ஆனி_மகம் அசுவினி:

தக்கார்வம் எய்திசமண் தவிர்ந்து

உந்தன் சரண் புகுந்தேன்

எக்கால் எப்பயன் நின் திறம்

அல்லால் எனக்கு உளதே

மிக்கார் தில்லையுள் விருப்பா

மிக வடமேரு என்னும்

திக்கா! திருச்சத்தி முற்றத்து

உறையும் சிவக்கொழுந்தே

#பரணி:

கரும்பினும் இனியான் தன்னைக்

காய்கதிர்ச் சோதியானை

இருங்கடல் அமுதம் தன்னை

இறப்பொடு பிறப்பு இலானைப்

பெரும்பொருள் கிளவியானைப்

பெருந்தவ முனிவர் ஏத்தும்

அரும்பொனை நினைந்த நெஞ்சம்

அழகிதாம் நினைந்தவாறே.

#கார்த்திகை_கிருத்திகை:

செல்வியைப் பாகம் கொண்டார்

சேந்தனை மகனாக் கொண்டார்

மல்லிகைக் கண்ணியோடு

மாமலர்க் கொன்றை சூடிக்

கல்வியைக் கரை இலாத

காஞ்சி மாநகர் தன்னுள்ளார்

எல்லிய விளங்க நின்றார்

இலங்கு மேற்றளியனாரே.

#ரோகிணி:

எங்கேனும் இருந்து உன்

அடியேன் உனை நினைந்தால்

அங்கே வந்து என்னோடும்

உடன் ஆகி நின்றருளி

இங்கே என் வினையை

அறுத்திட்டு எனை ஆளும்

கங்கா நாயகனே

கழிப்பாலை மேயோனே.

#மிருகசீரிடம்:

பண்ணின் இசை ஆகி நின்றாய் போற்றி

பாவிப்பார் பாவம் அறுப்பாய் போற்றி

எண்ணும் எழுத்தும் சொல் ஆனாய் போற்றி

என் சிந்தை நீங்கா இறைவா போற்றி

விண்ணும் நிலனும் தீ ஆனாய் போற்றி

மேலவர்க்கும் மேலாகி நின்றாய் போற்றி

கண்ணின் மணி ஆகி நின்றாய் போற்றி

கயிலை மலையானே போற்றி போற்றி

#திருவாதிரை_ஆதிரை:

கவ்வைக் கடல் கதறிக் கொணர்

முத்தம் கரைக்கு ஏற்றக்

கொவ்வைத் துவர் வாயார்

குடைந்து ஆடும் திருச்சுழியல்

தெய்வத்தினை வழிபாடு செய்து

எழுவார் அடி தொழுவார்

அவ்வத் திசைக்கு அரசு

ஆகுவர் அலராள் பிரியாளே.

#புனர்பூசம்:

மன்னும் மலைமகள் கையால்

வருடின மாமறைகள்

சொன்ன துறைதொறும் தூப்பொருள்

ஆயின தூக்கமலத்து

அன்னவடிவின அன்புடைத்

தொண்டர்க்கு அமுது அருத்தி

இன்னல் களைவன இன்னம்பரான்

தன் இணை அடியே.

#பூசம்:

பொருவிடை ஒன்றுடைப் புண்ணிய

மூர்த்திப் புலி அதளன்

உருவுடை அம்மலைமங்கை

மணாளன் உலகுக்கு எல்லாம்

திருவுடை அந்தணர் வாழ்கின்ற

தில்லை சிற்றம்பலவன்

திருவடியைக் கண்ட கண்கொண்டு

மற்று இனிக் காண்பது என்னே.

#ஆயில்யம்:

கருநட்ட கண்டனை அண்டத்

தலைவனைக் கற்பகத்தைச்

செருநட்ட மும்மதில் எய்ய

வல்லானைச் செந்நீ முழங்கத்

திருநட்டம் ஆடியைத் தில்லைக்கு

இறையைச் சிற்றம்பலத்துப்

பெருநட்டம் ஆடியை வானவர்

கோன் என்று வாழ்த்துவனே

#மகம்:

பொடி ஆர் மேனியனே! புரிநூல்

ஒருபால் பொருந்த

வடி ஆர் மூவிலை வேல் வளர்

கங்கையின் மங்கையொடும்

கடிஆர் கொன்றையனே! கடவூர்

தனுள் வீரட்டத்து எம்

அடிகேள்! என் அமுதே!

எனக்கு ஆர்துணை நீ அலதே.

#பூரம்:

நூல் அடைந்த கொள்கையாலே

நுன் அடி கூடுதற்கு

மால் அடைந்த நால்வர் கேட்க

நல்கிய நல்லறத்தை

ஆல் அடைந்த நீழல் மேவி

அருமறை சொன்னது என்னே

சேல் அடைந்த தண்கழனிச்

சேய்ன்ஞலூர் மேயவனே.

#உத்திரம்:

போழும் மதியும் புனக் கொன்றைப்

புனர்சேர் சென்னிப் புண்ணியா!

சூழம் அரவச் சுடர்ச் சோதீ

உன்னைத் தொழுவார் துயர் போக

வாழும் அவர்கள் அங்கங்கே

வைத்த சிந்தை உய்த்து ஆட்ட

ஆழும் திரைக்காவிரிக் கோட்டத்து

ஐயாறு உடைய அடிகளே.

#அஸ்தம்:

வேதியா வேத கீதா விண்ணவர்

அண்ணா என்று

ஓதியே மலர்கள் தூவி ஒருங்கு

நின் கழல்கள் காணப்

பாதி ஓர் பெண்ணை வைத்தாய்

படர் சடை மதியம் சூடும்

ஆதியே ஆலவாயில் அப்பனே

அருள் செயாயே.

#சித்திரை:

நின் அடியே வழிபடுவான்

நிமலா நினைக் கருத

என் அடியான் உயிரை வவ்வேல்

என்று அடர்கூற்று உதைத்த

பொன் அடியே இடர் களையாய்

நெடுங்களம் மேயவனே.

#சுவாதி:

காவினை இட்டும் குளம் பல

தொட்டும் கனி மனத்தால்

ஏவினையால் எயில் மூன்று

எரித்தீர் என்று இருபொழுதும்

பூவினைக் கொய்து மலரடி

போற்றுதும் நாம் அடியோம்

தீவினை வந்து எமைத்

தீண்டப்பெறா திருநீலகண்டம்.

#விசாகம்:

விண்ணவர் தொழுது ஏத்த நின்றானை

வேதம் தான் விரித்து ஓத வல்லனை

நண்ணினார்க்கு என்றும் நல்லவன் தன்னை

நாளும் நாம் உகக்கின்ற பிரானை

எண்ணில் தொல்புகழாள் உமை நங்கை

என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற

கண்ணும் மூன்று உடைக் கம்பன் எம்மானைக்

காணக் கண் அடியேன் பெற்றவாறே.

#அனுஷம்:

மயிலார் சாயல் மாது ஓர் பாகமா

எயிலார் சாய எரித்த எந்தை தன்

குயிலார் சோலைக் கோலக்காவையே

பயிலா நிற்கப் பறையும் பாவமே.

#கேட்டை:

முல்லை நன்முறுவல் உமை பங்கனார்

தில்லை அம்பலத்தில் உறை செல்வனார்

கொல்லை ஏற்றினர் கோடிகாவா என்று அங்கு

ஒல்லை ஏத்துவார்க்கு ஊனம் ஒன்று இல்லையே.

#மூலம்:

கீளார் கோவணமும் திருநீறும்

மெய்பூசி உன் தன்

தாளே வந்து அடைந்தேன் தலைவா

எனை ஏற்றுக்கொள் நீ

வாள் ஆர் கண்ணி பங்கா!

மழபாடியுள் மாணிக்கமே

ஆளாய் நின்னையல்லால்

இனியாரை நினைக்கேனே.

#பூராடம்:

நின் ஆவார் பிறர் அன்றி நீயே ஆனாய்

நினைப்பார்கள் மனத்துக்கு ஓர் வித்தும் ஆனாய்

மன் ஆனாய் மன்னவர்க்கு ஓர் அமுதம் ஆனாய்

மறை நான்கும் ஆனாய் ஆறு அங்கம் ஆனாய்

பொன் ஆனாய் மணி ஆனாய் போகம் ஆனாய்

பூமி மேல் புகழ்தக்கப் பொருளே உன்னை

என் ஆனாய் என் ஆனாய் என்னின் அல்லால்

ஏழையேன் என் சொல்லி ஏத்துகேனே.

#உத்திராடம்:

குறைவிலா நிறைவே குணக்குன்றே

கூத்தனே குழைக்காது உடையோனே

உறவு இலேன் உனை அன்றி மற்று அறியேன்

ஒரு பிழை பொறுத்தால் இழிவு உண்டே

சிறைவண்டு ஆர் பொழில் சூழ்திருவாரூர்ச்

செம்பொனே திருவடுதுறையுள்

அறவோனே எனை அஞ்சல் என்று அருளாய்

ஆர் எனக்கு உறவு அமரர்கள் ஏறே

#திருவோணம்_ஓணம்:

வேதம் ஓதி வெண்நூல் பூண்ட

வெள்ளை எருது ஏறி

பூதம் சூழப் பொலிய வருவார்

புலியின் உரிதோலார்

நாதா எனவும் நக்கா எனவும்

நம்பா என நின்று

பாதம் தொழுவார் பாவம்

தீர்ப்பார் பழன நகராரே.

#அவிட்டம் :

எண்ணும் எழுத்தும் குறியும்

அறிபவர் தாம் மொழியப்

பண்ணின் இடைமொழி பாடிய

வானவரதா பணிவார்

திண்ணென் வினைகளைத்

தீர்க்கும் பிரா திருவேதிக்குடி

நண்ணரிய அமுதினை

நாம் அடைந்து ஆடுதுமே.

#சதயம் :

கூடிய இலயம் சதி பிழையாமைக்

கொடி இடை இமையவள் காண

ஆடிய அழகா அருமறைப் பொருளே

அங்கணா எங்கு உற்றாய் என்று

தேடிய வானோர் சேர் திருமுல்லை

வாயிலாய் திருப்புகழ் விருப்பால்

பாடிய அடியேன் படுதுயர் களையாய்

பாசுபதா பரஞ்சுடரே.

#பூரட்டாதி:

முடி கொண்ட மத்தமும் முக்கண்ணனின்

நோக்கும் முறுவலிப்பும்

துடிகொண்ட கையும் துதைந்த

வெண்ணீறும் சுரிகுழலாள்

படி கொண்ட பாகமும் பாய்புலித்

தோலும் என் பாவி நெஞ்சில்

குடி கொண்டவா தில்லை அம்பலக்

கூத்தன் குரை கழலே.

#உத்திரட்டாதி:

நாளாய போகாமே நஞ்சு

அணியும் கண்டனுக்கு

ஆளாய அன்பு செய்வோம்

மட நெஞ்சே அரன் நாமம்

கேளாய் நம் கிளை கிளைக்கும்

கேடுபடாத்திறம் அருளிக்

கோள் ஆய நீக்குமவன்

கோளிலி எம்பெருமானே.

#ரேவதி:

நாயினும் கடைப்பட்டேனை

நன்னெறி காட்டி ஆண்டாய்

ஆயிரம் அரவம் ஆர்த்த

அமுதனே அமுதம் ஒத்து

நீயும் என் நெஞ்சினுள் நிலாவிளாய்

நிலாவி நிற்க

நோயவை சாரும் ஆகில் நோக்கி

நீ அருள் செய்வாயே.

திருச்சிற்றம்பலம்

27நட்சத்திரங்கள் எவ்வாறு செயல்படுகிறது?

 1.#அஸ்வினி - விக்ரகத்தின் கிரீடம்

2. #பரணி - கற்பூரத் தட்டு

3.#கிருத்திகை - தூண்டா விளக்கு

4.#ரோகிணி - நைவேத்தியப் பொருள்

5.#மிருகசீரிஷம் - பீடத்தின் தீர்த்தம்

6.#திருவாதிரை - கர்ப்பகிரகம்

7.#புனர்பூசம் - அலங்காரப் பொருள்

8.#பூசம் - அர்த்தமண்டபம்

9.#ஆயில்யம் - தேவையற்ற குப்பை போடும் இடம்

10.#மகம் - விபூதி, சந்தனம்

11.#பூரம் - சபா மண்டபம்

12.#உத்திரம் - கிணறு நீர் தொட்டி

13.#ஹஸ்தம் - அபயமுத்திரை

14.#சித்திரை - அலங்கார வஸ்திரம்

15.#சுவாதி - நெய்விளக்கு

16.#விசாகம் - பிரகாரங்கள்

17.#அனுஷம் - காற்றோட்டமான இடம்

18.#கேட்டை - பூஜைபொருள் இடம்

19.#மூலம் - உண்டியல் பகுதி

20.#பூராடம் - கர்ப்பகிரக விமானம்

21.#உத்திராடம் - கால் கழுவும் இடம்

22.#திருவோணம் - நவக்கிரகம் உப தெய்வம்

23.#அவிட்டம் - மணியோசை

24.#சதயம் - காலபைரவர்

25.#பூரட்டாதி -பிரகார சுற்று வழி

26.#உத்திரட்டாதி - மடப்பள்ளி

27.#ரேவதி - நந்தவனம்

நட்சத்திரத்துக்கு உகந்த - யோகம் தரும் மலர்

 ஒவ்வொருவரும் தங்களது நட்சத்திரத்துக்கு உகந்த - யோகம் தரும் மலர்களை பூஜையில் பயன்படுத்தி பலன்களை பெறுங்கள்.

அஸ்வதி - சாமந்தி
பரணி - முல்லை
கார்த்திகை - செவ்வரளி
ரோகினி - பாரிஜாதம்
மிருகசீரிஷம் - ஜாதி மல்லி
திருவாதிரை - வில்வப்பூ
புனர்பூசம் - மரிக்கொழுந்து
பூசம் - பன்னீர்மலர்
ஆயில்யம் - செவ்வரளி
மகம் - மல்லிகை
பூரம் - தாமரை
உத்திரம் - கதம்பம்
அஸ்தம் - வெண்தாமரை
சித்திரை - மந்தாரை
சுவாதி - மஞ்சள் அரளி
விசாகம் - இருவாட்சி
அனுஷம் - செம்முல்லை
கேட்டை - பன்னீர் ரோஜா
மூலம் - வெண்சங்கு மலர்
பூராடம் - விருட்சி
உத்திராடம் - சம்பங்கி
திருவோணம் - செந்நிற ரோஜா
அவிட்டம் - செண்பகம்
சதயம் - நீலோற்பலம்
பூரட்டாதி - வெள்ளரளி
உத்திரட்டாதி - நந்தியாவர்த்தம்
ரேவதி - செம்பருத்தி

27 நட்சத்திரங்களுக்கும் உரிய சிவ வடிவங்களையும் வணங்கி வரலாம்.

 27 நட்சத்திரங்களுக்கும் உரிய சிவ வடிவங்களையும் வணங்கி வரலாம். அந்த வகையில் இங்கே 27 நட்சத்திரங்களுக்காக சிவ வடிவங்கள் தரப்பட்டுள்ளது. அவற்றைப் பார்க்கலாம்.

* அஸ்வினி - கோமாதாவுடன் கூடிய சிவன்
* பரணி - சக்தியுடன் இருக்கும் சிவன்
* கார்த்திகை - சிவபெருமான்
* ரோகிணி - பிறை சூடிய பெருமான்
* மிருகசீரிஷம் - முருகனுடன் இருக்கும் சிவன்
* திருவாதிரை - நாகம் குடைபிடிக்கும் சிவன்
* புனர்பூசம் - விநாயகர், முருகனுடன் உள்ள சிவன்
* பூசம் - நஞ்சுண்ணும் சிவன்
* ஆயில்யம் - விஷ்ணுவுடன் உள்ள சிவன்
* மகம் - விநாயகரை மடியில் வைத்த சிவன்
* பூரம் - அர்த்தநாரீஸ்வரர்
* உத்ரம் - நடராஜ பெருமான்
* ஹஸ்தம் - தியான கோல சிவன்
* சித்திரை - பார்வதிதேவி, நந்தியுடன் சிவன்
* சுவாதி - சகஸ்ரலிங்கம்
* விசாகம் - காமதேனு மற்றும் பார்வதியுடன்
உள்ள சிவன்
* அனுஷம் - ராமர் வழிபட்ட சிவன்
* கேட்டை - நந்தியுடன் உள்ள சிவன்
* மூலம் - சர்ப்ப விநாயகருடன் உள்ள சிவன்
* பூராடம் - சிவ-சக்தி-கணபதி
* உத்திராடம் - ரிஷபத்தின் மேல் அமர்ந்து
பார்வதியுடன் இருக்கும் சிவன்
* திருவோணம் - விநாயகருடன், பிறைசூடிய சிவன்
* அவிட்டம் - மணக்கோலத்தில் உள்ள சிவன்
* சதயம் - ரிஷபம் மீது சக்தியுடன்
வீற்றிருக்கும் சிவன்
* பூராட்டாதி - விநாயகரை மடியின் முன்புறமும்,
சக்தியை அருகிலும் வைத்திருக்கும்
சிவன்
* உத்திரட்டாதி - கயிலாய மலையில் காட்சி
தரும் சிவன்
* ரேவதி - குடும்பத்துடன் உள்ள சிவன்

நட்சத்திரங்களும் அதிதேவதைகளும்

 நட்சத்திரங்களும் அதிதேவதைகளும்

1. அஸ்வினி - சரஸ்வதி.
2. பரணி - துர்கை.
3. கார்த்திகை - அக்னி.
4. ரோகிணி - பிரம்மா.
5. மிருகசீரிடம் - சந்திரன்.
6. திருவாதிரை - ருத்திரன்
7. புனர்பூசம் - அதிதி.
8. பூசம் - பிரகஸ்பதி
9. ஆயில்யம் - ஆதிசேஷன்
10. மகம் - ராஜராஜேஸ்வரி.
11. பூரம் - பார்வதி.
12. உத்திரம் - சூரியன்.
13. அஸ்தம் - ஐயப்பன்.
14. சித்திரை - விஷ்வகர்மா.
15. சுவாதி - வாயு.
16. விசாகம் - முருகன்.
17. அனுஷம் - லட்சுமி.
18. கேட்டை- இந்திரன்.
19. மூலம் - நைருதி
20. பூராடம் - வருணி
21. உத்திராடம் - சிவன்.
22. திருவோணம் - மகாவிஷ்ணு .
23. அவிட்டம் - வசுக்கள் .
24. சதயம் - லிங்கோத்பவர்.
25. பூரட்டாதி - குபேரன்.
26. உத்திரட்டாதி - காமதேனு.
27.ரேவதி - அரங்கநாத பெருமாள்

27 நட்சத்திரங்களின் காயத்ரி மந்திரங்கள்

 உங்கள் நட்சத்திர காயத்ரி மந்திரத்தை மனப்பாடம் செய்து தினமும் குறைந்தது 9 முறையாவது சொல்லுங்கள். வாழ்க்கையில் மிகச்சிறந்த முன்னேற்றம் காணலாம்.

அஸ்வினி
ஓம் ஸ்வேத வர்ண்யை வித்மஹே
சுதாகராயை தீமஹி
தன்னோ அச்வநௌ ப்ரசோதயாத்
பரணி.!!!
""""""""""""""""""""""""""""
ஓம் க்ருஷ்ணவர்னாயை வித்மஹே
தண்டதராயை தீமஹி
தன்னோ பரணி ப்ரசோதயாத்
கிருத்திகை.!!!
""""""""""""""""""""""""""""
ஓம் வன்னிதேஹாயை வித்மஹே
மஹாதபாயை தீமஹி
தன்னோ க்ருத்திகா ப்ரசோதயாத்
ரோஹிணி.!!!
""""""""""""""""""""""""""""
ஓம் ப்ராஜாவிருத்யைச வித்மஹே
விச்வரூபாயை தீமஹி
தன்னோ ரோஹினி ப்ரசோதயாத்
மிருகசீரிடம்.!!!
""""""""""""""""""""""""""""
ஓம் சசிசேகராய வித்மஹே
மஹாராஜாய தீமஹி
தன்னோ ம்ருகசீர்ஷா ப்ரசோதயாத்
திருவாதிரை.!!!
""""""""""""""""""""""""""""""""
ஓம் மஹா ச்ரேஷ்டாய வித்மஹே
பசும்தநாய தீமஹி
தன்னோ ஆர்த்ரா ப்ரசோதயாத்
புனர்பூசம்.!!!
""""""""""""""""""""""""""""""""
ஓம் ப்ரஜாவ்ருத்யைச வித்மஹே
அதிதிபுத்ராய த தீமஹி
தன்னோ புனர்வஸு ப்ரசோதயாத்
பூசம்.!!!
""""""""""""""""""""""""""""""""
ஓம் ப்ரம்ம்வர்ச்சஸாய வித்மஹே
மஹா திஷ்யாய தீமஹி
தன்னோ புஷ்ய ப்ரசோதயாத்
ஆயில்யம்.!!!
""""""""""""""""""""""""""""""
ஓம் ஸர்பராஜாய வித்மஹே
மஹா ரோசனாய தீமஹி
தன்னோ ஆச்லேஷ ப்ரசோதயாத்
மகம்.!!!
"""""""""""""""""""""""""
ஓம் மஹா அனகாய வித்மஹே
பித்ரியா தேவாய தீமஹி
தன்னோ மகஃப்ரசோதயாத்
பூரம்.!!!
""""""""""""""""""""""""""
ஓம் அரியம்நாய வித்மஹே
பசுதேஹாய தீமஹி
தன்னோ பூர்வபால்குநீ ப்ரசோதயாத்
உத்திரம்.!!!
"""""""""""""""""""""""""""""
ஓம் மஹாபகாயை வித்மஹே
மஹாச்ரேஷ்டாயை தீமஹி
தன்னோ உத்ரபால்குநீ ப்ரசோதயாத்
அஸ்தம்.!!!
""""""""""""""""""""""""
ஓம் ப்ரயச்சதாயை வித்மஹே
ப்ரக்ருப்ணீதாயை தீமஹி
தன்னோ ஹஸ்தா ப்ரசோதயாத்
சித்திரை.!!!
"""""""""""""""""""""""""""""
ஓம் மஹா த்வஷ்டாயை வித்மஹே
ப்ரஜாரூபாயை தீமஹி
தன்னோ சைத்ரா ப்ரசோதயாத்
சுவாதி.!!!
""""""""""""""""""""""""""""
ஓம் காமசாராயை வித்மஹே
மகாநிஷ்டாயை தீமஹி
தன்னோ சுவாதி ப்ரசோதயாத்
விசாகம்.!!!
"""""""""""""""""""""""""
ஓம் இந்த்ராக்நௌச வித்மஹே
மஹாச்ரேஷ்ட்யைச தீமஹி
தன்னோ விசாகா ப்ரசோதயாத்
அனுஷம்.!!!
""""""""""""""""""""""""""""""
ஓம் மித்ரதேயாயை வித்மஹே
மஹா மித்ராய தீமஹி
தன்னோ அனுராதா ப்ரசோதயாத்
கேட்டை.!!!
"""""""""""""""""""""""""""""
ஓம் ஜயேஷ்டாயை வித்மஹே
மகா ஜய்ஷ்ட்யாயை தீமஹி
தன்னோ ஜ்யேஷ்டா ப்ரசோதயாத்
மூலம்.!!!
"""""""""""""""""""""""""""""""
ஓம் ப்ராஜாதிபாயை வித்மஹே
மஹப்ராஜையை தீமஹி
தன்னோ மூலாப் ப்ரசோதயாத்
பூராடம்.!!!
"""""""""""""""""""""""""""
ஓம் சமுத்ரகாமாயை வித்மஹே
மஹாபிஜிதாயை தீமஹி
தன்னோ பூர்வாஷாடா ப்ரசோதயாத்
உத்திராடம்.!!!
""""""""""""""""""""""""""""
ஓம் விஸ்வேதேவாய வித்மஹே
மஹா ஷாடாய தீமஹி
தன்னோ உத்ராஷாடா ப்ரசோதயாத்
திருவோணம்.!!!
""""""""""""""""""""""""""""""
ஓம் மஹா ச்ரோணாய வித்மஹே
புண்யஸ்லோகாய தீமஹி
தன்னோ ச்ரோணா ப்ரசோதயாத்
அவிட்டம்.!!!
"""""""""""""""""""""""""""""
ஓம் அக்ர நாதாய வித்மஹே
வசூபரீதாய தீமஹி
தன்னோ சரவிஹ்டா ப்ரசோதயாத்
சதயம்.!!!
"""""""""""""""""""""""""""""
ஓம் பேஷஜயா வித்மஹே
வருண தேஹா தீமஹி
தன்னோ சதபிஷக் ப்ரசோதயாத்
பூரட்டாதி.!!!
"""""""""""""""""""""""""""""
ஓம் தேஜஸ்கராய வித்மஹே
அஜஏகபாதாய தீமஹி
தன்னோ பூர்வப்ரோஷ்டபத ப்ரசோதயாத்
உத்திரட்டாதி.!!!
"""""""""""""""""""""""""""""""
ஓம் அஹிர் புத்ந்யாய வித்மஹே
ப்ரதிஷ்டாபநாய தீமஹி
தன்னோ உத்ரப்ப்ரோஷ்டபத ப்ரசோதயாத்
ரேவதி.!!!
"""""""""""""""""""""""""""""
ஓம் விச்வரூபாய வித்மஹே
பூஷ்ண தேஹாய தீமஹி
தன்னோ ரைய்வதி ப்ரசோதயாத்.

ஜென்ம நட்சத்திரத்துக்கு வெற்றி தரும் நட்சத்திரங்கள்

  ஜென்ம நட்சத்திரத்துக்கு வெற்றி தரும் நட்சத்திரங்கள்

ஒவ்வொரு காரியம் செய்யும் போதும் உங்கள் ஜென்ம நட்சத்திரம் உரிய வெற்றி நட்சத்திர அறிந்து செயல் பட்டால் அந்த செயல் வெற்றி நிச்சயம் "புதிய தொழில் தொடங்க,சொத்து வரவு
வர்த்தக பண முதலீடு,சுபநிகழ்ச்சி பேச்சு,
பதவி ஏற்பு" போன்றவை.
" புனர்பூசம் - உத்திரம் "
புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்
வெற்றி நட்சத்திரம் :
மிருகசீரிஷம் , பூசம் , அனுஷம் , அஸ்வினி , சித்திரை , பூசம் , மகம் , மூலம் , உத்திரம் , உத்திராடம் , உத்திரட்டாதி.
பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்
வெற்றி நட்சத்திரம் :
ரோகிணி , அஸ்தம் , புனர்பூசம் , திருவோணம் , சுவாதி , விசாகம் , ரேவதி.
ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்
வெற்றி நட்சத்திரம் :
அஸ்வினி , மிருகசீரிஷம் , அனுசம் , சித்திரை , புனர்பூசம் , மகம் , மூலம் , உத்திரம் , உத்திராடம் , உத்திரட்டாதி.
மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்
வெற்றி நட்சத்திரம் :
ரோகிணி , அஸ்தம் , திருவோணம் , சுவாதி , சதயம் , பூசம் , அனுசம்.
பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்
வெற்றி நட்சத்திரம் :
அஸ்வினி , மிருகசீரிஷம் , புனர்பூசம் , சித்திரை , மகம் , மூலம் , அவிட்டம் , விசாகம் , உத்திரம் , உத்திராடம்.
உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்
வெற்றி நட்சத்திரம் :
ரோகிணி , திருவோணம் , சுவாதி , அனுசம் , சதயம் , அஸ்தம் , மகம் , பூசம் , மூலம் , உத்திரட்டாதி.

27 நட்சத்திரங்களுக்கு உரிய அதிர்ஷ்டம் தரும் தெய்வங்கள்

 27 நட்சத்திரங்களுக்கு உரிய அதிர்ஷ்டம் தரும் தெய்வங்கள் பற்றிய தகவலை இங்கே பார்க்கலாம்.

அஸ்வினி - சரஸ்வதி தேவி

பரணி - துர்கா தேவி (அஸ்ட புஜம்)

கார்த்திகை - முருகப்பெருமான்
ரோகிணி - கிருஷ்ணன்
மிருகசீரிஷம் - சிவபெருமான்
திருவாதிரை - சிவபெருமான்
புனர்பூசம் - ராமர்
பூசம் - தட்சிணாமூர்த்தி
ஆயில்யம் - ஆதிசேஷன்
மகம் - சூரிய பகவான்
பூரம் - ஆண்டாள்
உத்திரம் - மகாலட்சுமி
ஹஸ்தம் - காயத்திரி தேவி
சித்திரை - சக்கரத்தாழ்வார்
சுவாதி - நரசிம்மமூர்த்தி
விசாகம் - முருகப்பெருமான்
அனுசம் - லட்சுமி நாராயணர்
கேட்டை - வராஹ பெருமாள்
மூலம் - ஆஞ்சநேயர்
பூராடம் - ஜம்புகேஸ்வரர்
உத்திராடம் - விநாயகப் பெருமான்
திருவோணம் - ஹயக்ரீவர்
அவிட்டம் - அனந்த சயனப் பெருமாள்
சதயம் - மிருத்யுஞ்ஜேஸ்வரர்
பூரட்டாதி - ஏகபாதர்
உத்திரட்டாதி - மகா ஈஸ்வரர்
ரேவதி - அரங்கநாதன்
அந்தந்த நட்சத்திரத்திற்கு உரியவர்கள் தங்களுக்குரிய தெய்வங்களை வணங்கி வாழ்வில் எல்லா நலமும் வளமும் பெறலாம் என ஜாதகபுராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நட்சத்திரங்களூம் தானங்களும்

 நட்சத்திரங்களூம் தானங்களும்

1. அஸ்வினி - பொன் தானம்
2. பரணி - எள் தானம்
3. கிருத்திகை - அன்ன தானம்
4. ரோஹிணி - பால் தானம்
5. மிருகசீரிடம் - கோதானம்
6. திருவாதிரை - எள் தானம்
7. புனர்பூசம் - அன்ன தானம்
8. பூசம் - சந்தன தானம்
9. ஆயில்யம் - காளைமாடு தானம்
10. மகம் - எள் தானம்
11. பூரம் - பொன் தானம்
12. உத்திரம் - எள் தானம்
13. ஹஸ்தம் - வாகன தானம்
14. சித்திரை- வஸ்திர தானம்
15. ஸ்வாதி- பணம் தானம்
16. விசாகம் - அன்ன தானம்
17. அனுசம் - வஸ்திர தானம்
18. கேட்டை - கோ தானம்
19. மூலம் - எருமை தானம்
20. பூராடம் - அன்ன தானம்
21. உத்திராடம் - நெய் தானம்
22. திருவோணம் - வஸ்திர தானம்
23. அவிட்டம் - வஸ்திர தானம்
24. சதயம் - சந்தன தானம்
25. பூரட்டாதி - பொன் தானம்
26. உத்திரட்டாதி - வெள்ளாடு தானம்
27. ரேவதி - பொன் தானம் தயிர்சாதம்